Last Updated:
Namakkal Jallikattu| ஒன்பதாம் ஆண்டாக நாமக்கல் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆகும். இது பொங்கல் திருவிழாவின் ஒரு முக்கிய அங்கமாக நடைபெறுகிறது. மாடுகள் வளர்ப்பு மற்றும் வீரத்தைக் காட்டும் இந்த விளையாட்டு, குறிப்பாக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பிரபலமாக உள்ளது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வலையகாரனூர் பகுதியில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் 9ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் நாமக்கல் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அதேபோல் காளைகளை அடக்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 400கும் மேற்பட்ட காளைபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டில் அடிபட்ட காளைக்பிடி வீரர்களுக்கு உடனே மருத்துவ வசதி அளிக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆகும். இது பொங்கல் திருவிழாவின் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டாடப்படும். பசு, மாடுகள் வளர்ப்பு மற்றும் வீரத்தைக் காட்டும் இந்த விளையாட்டு, குறிப்பாக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வலையகாரனூர் பகுதியில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் ஒன்பதாம் ஆண்டாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உறுதிமொழி வாசித்தும், தமிழக ஆதித் திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்தும் துவக்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன, அதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளை அடக்க தமிழகத்திலிருந்து 400 கும் மேற்பட்ட காளைபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் அடிபட்ட காளைக்பிடி வீரர்களுக்கு உடனே மருத்துவ வசதி அளிக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 02, 2025 12:39 PM IST

