Last Updated:
“இதை சரிசெய்யாவிட்டால் உலகில் பெருவாரியான மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் ஏற்படும்” – பிரதமர் மோடி எச்சரிக்கை.
உலகில் அதிகரித்துள்ள சவாலான சூழல் வேகமாக மாற்றப்படாவிட்டால் வறுமை சூழும் அபாயம் எழுந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினர் நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது நடந்து வரும் உலக நாடுகளின் மோதல்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடி என தொடர்ச்சியாக உலகம் சவால்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
#WATCH | Netherlands: Prime Minister Narendra Modi says, “The world is dealing with new challenges. First Corona, then war and today’s energy crisis. This decade is becoming full of challenges. If the situations are not changed rapidly, the achievements of last multiple decades… pic.twitter.com/z66QypsBlN
— ANI (@ANI) May 16, 2026
இந்த தசாப்தம், போருக்கான தசாப்தமாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், இதை சரிசெய்யாவிட்டால் உலகில் பெருவாரியான மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். 21ஆம் நூற்றாண்டில் வாய்ப்புகளுக்கான பூமியாக இந்தியா மாறிவருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


