• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடூர குற்றங்களை உலகம் நினைவுகூர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் சுமார் 3 இலட்சம் மக்கள் அடைக்கப்பட்டு, தொடர்ந்து குண்டுவீச்சுகளுக்கும் பீரங்கித் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்று அவர் செனட் சபையில் குறிப்பிட்டார்.


மேலும், “தமிழர் இனப்படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டில் ஒரே நாளில் நடந்த சம்பவமல்ல. அது பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன், இன்றும் அதன் விளைவுகள் தொடர்கின்றன.

முள்ளிவாய்க்கால் படுகொலை 



முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம் | Australian Senator Speaks Out For Tamils

இந்தப் படுகொலையின் போது சுமார் 169,769 தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.


ஆயுத மோதலின் இறுதி மாதங்களில், தமிழர்களுக்கு எதிராக சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமலாக்கங்கள், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களாலும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மே 18 சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு 19 அருங்காட்சியகங்களுக்கு இலவச அனுமதி – Malaysiakini

Next Post

Modi about Poverty | “உலகம் முழுக்க வறுமை சூழும் அபாயம்” – பிரதமர் மோடி கவலை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Modi about Poverty | “உலகம் முழுக்க வறுமை சூழும் அபாயம்” – பிரதமர் மோடி கவலை | India News (இந்தியா செய்திகள்)

Modi about Poverty | “உலகம் முழுக்க வறுமை சூழும் அபாயம்” - பிரதமர் மோடி கவலை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin