தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020-இல் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது.
ஆலை நிர்வாகம் தரப்பில் , “ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளது. ஆனாலும், அரசியல் காரணத்துக்காக அதைத் திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் நடைபெற்றது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 29 )தள்ளுபடி செய்துள்ளது.