வணிக சிலிண்டர் தானே விலை உயர்ந்துள்ளது, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏற்றம் இல்லையே என நிம்மதி பெருமூச்சு விட முடியாது. காரணம் வணிக சிலிண்டர் விலை உயர்வால், உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. டீ, காபி, டிபன் மற்றும் மதிய உணவுகளின் விலை அதிகரிப்பதால், வேலைக்குச் செல்வோர் மட்டுமின்றி பேச்சுலர்களின் மாதாந்திர பட்ஜெட்டும் எகிறியுள்ளது.


