இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில், சுமார் 1,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைக்கூட துல்லியமாகத் தாக்கும் நீண்ட தூர ஏவுகணையொன்றை இந்தியாவே தயாரித்து அசத்தியுள்ளது. இந்த ஏவுகணையின் சோதனை ஓட்டம், ஒடிசா கடற்கரையில் நேற்று (மே 1) நடந்த நிலையில், அது வெற்றிகரமாக முடிந்துள்ளதால் இந்தியாவிற்கு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.


