கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 மற்றும் முனையம் 2 ஆகிய இரண்டிலும் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வரி உட்பட RM2 ஆக குறைக்கப்பட்டு, இன்றிலிருந்து உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதன் மூலம், முன்னதாக முனையம் 1-இல் வசூலிக்கப்பட்டு வந்த RM3 கட்டணமும், முனையம் 2-இல் வசூலிக்கப்பட்டு வந்த RM2.16 கட்டணமும் குறைக்கப்பட்டு, இரண்டு முனையங்களிலும் பயணிகள் மற்றும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு ஒரே சீரான கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (MAHB) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.”
பயணிகள் மற்றும் இ-ஹெய்லிங் சேவை நிறுவனங்களுக்குக் கூடுதல் தெளிவையும், இரண்டு முனையங்களிலும் சிரமமற்ற பயணப் பரிமாற்றத்தையும் வழங்கும் நோக்கில் இக்கட்டணச் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.” என்று மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



