Last Updated:
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் யூத விரோத தாக்குதல்களை கட்டுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அந்நாட்டு மன்னர் சார்லஸ் கூறினார்.
பக்கிங்காம் அரண்மனையில் இருந்து இங்கிலாந்து நாடாளுமன்றம் சென்ற மன்னர் சார்லஸிற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை அறிவிக்கும் முன்பு பாரம்பரிய மன்னர் உரை இடம்பெறுவது வழக்கம். இதில், கலந்து கொள்வதற்காக சென்ற மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு, அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும் எனக் கூறினார். மேலும், நேட்டோ அமைப்பில் இங்கிலாந்தின் ஒத்துழைப்பு தொடரும் என்றும், பாதுகாப்பிற்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். நாட்டில் அதிகரித்து வரும் யூத விரோத தாக்குதல்களை கட்டுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் மன்னர் சார்லஸ் கூறினார்.
May 14, 2026 12:19 PM IST


