Last Updated:
Jio Bumper Offer | ரிலையன்ஸ் ஜியோ, வரும் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கான அற்புதமான சலுகையை கொண்டுவந்துள்ளது.
ICC சாம்பியன்ஸ் டிராபி ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் பிரீமியர் லீக் இன் 18வது சீசன் (ஐபிஎல் 18வது எடிஷன்) ஆனது வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ, வரும் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கான அற்புதமான சலுகையை கொண்டுவந்துள்ளது. ஐபிஎல் 2025 சீசன் ஆனது ஜியோ ஹாட்ஸ்டார் OTT பிளாட்பார்மில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் அதை டிவி மற்றும் மொபைல் டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக பல புதிய டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவை வழங்குவது மட்டுமின்றி ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவையும் வழங்குவதாகும். ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை இலக்காகக் கொண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சந்தா மூலம், பயனர்கள் ரீசார்ஜ் செய்வதால், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கிரிக்கெட் சீசனின் அனைத்துப் போட்டிகளையும் பார்க்க முடியும்.
ஜியோ ரூ.100 டேட்டா பேக்:
ஜியோ வழங்கும் ரூ.100 டேட்டா பேக் திட்டமானது, உங்கள் பட்ஜெட்டுக்கு எளிதில் பொருந்தக்கூடிய திட்டமாகும். இந்த பேக்கின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். மேலும், இந்த திட்டமானது 5 ஜிபி மொபைல் டேட்டாவையும் வழங்குகிறது. 5 ஜிபி டேட்டாவை முடித்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஆனது 90 நாட்களுக்கு ஆக்ட்டிவாக இருக்கும். மேலும், அதை மொபைல் அல்லது டிவி மூலம் அக்சஸ் செய்து பார்க்கலாம்.
ஜியோ ரூ.195 டேட்டா பேக்:
அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு ரூ.195 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 90 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவீர்கள். மேலும், இந்த திட்டமானது 15 ஜிபி மொபைல் டேட்டாவையும் வழங்குகிறது. 15 ஜிபி டேட்டாவை முடித்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். ஆனால், இதில் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஆனது மொபைல் டிவைஸில் மட்டுமே கிடைக்கும். OTT யில் IPL ஸ்ட்ரீம் செய்ய விரும்புவோருக்கு இந்த திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.
இதையும் படிக்க: Small personal loan | சிறு தனிநபர் கடன் பற்றி உங்களுக்கு தெரியுமா…? அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க…!
ஜியோ அன்லிமிடெட் டேட்டா பேக்:
ஒரு நாளைக்கு அன்லிமிடெட் டேட்டா பேக் தேவைப்படுபவர்களுக்கு ரூ.49 கிரிக்கெட் ஆஃபர் அன்லிமிடெட் டேட்டா பேக் சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டமானது 25 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக்கிற்கு பேஸ் பிளானும் தேவை. உங்களிடம் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் இருந்தால் மற்றும் நாள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
March 18, 2025 6:21 PM IST
Jio Bumper Offer | கிரிக்கெட் ரசிகர்களுக்கான ஜியோ பம்பர் சலுகை: ரூ.100 டேட்டா பேக் மூலம் ஐபிஎல் 2025ஐ இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம்…!


