லசித் மலிங்கா பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸின் துருப்புச் சீட்டாக இருந்து வருகிறார், மேலும் 2013 பதிப்பிலிருந்து, ஜஸ்பிரித் பும்ராவில் அவருக்கு ஒரு சரியான துணை கிடைத்துள்ளது. இலங்கை லெஜண்டின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நல்ல வளர்ச்சி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும், மலிங்கா ஓய்வு பெறுவதற்கு முன்பே, அணியின் அடுத்த நம்பிக்கையான பவுலராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் பும்ரா.