Last Updated:
அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் அரசுகளையும் ஒத்துழைப்புக்காக, தான் அழைப்பதாகவும் மொஜ்தபா குறிப்பிட்டுள்ளார் ஈரான் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி
இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க- இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடிக்கும் போரால் பதற்றமான சூழல் நீடிக்கிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பின்னர், மார்ச் 8ஆம் தேதி அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மொஜ்தபா கமேனி
இந்நிலையில் கடுமையான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் புனித ஹஜ் யாத்திரையையொட்டி எக்ஸ் பக்கத்தில் மொஜ்தபா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மனப்பூர்வமான மற்றும் தூய நோக்கத்துடன், அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் அரசுகளையும் ஒத்துழைப்புக்காக, தான் அழைப்பதாகவும் மொஜ்தபா குறிப்பிட்டுள்ளார்.


