வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் களமிறங்கியதால், மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டியை ஐபிஎல்லில் தக்க வைப்பதில் அவர்கள் சார்ந்த அணிகளுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.
தற்போதைய ஐபிஎல் ஏல விதிகளின்படி, சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரரை அவர் சார்ந்த அணி, 4 கோடி ரூபாய்க்குத் தக்க வைக்க முடியும். அக்டோபர் 31ஆம் தேதி வரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத வீரர்களே இதில் கணக்கில் கொள்ளப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லக்னோ அணி வீரர் மயங்க் யாதவ் மற்றும் ஐதராபாத் அணி வீரர் நிதிஷ் ரெட்டி ஆகிய இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச வீரர்களாக தற்போது அறிமுகமாகி விட்டனர்.
இதையும் படிக்க:
WWE-யில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா?
இதனால் இரு அணி நிர்வாகங்களும் அவர்களை குறைந்த தொகைக்குத் தக்க வைப்பதில் ஏல விதிகள் அடிப்படையில் சிக்கல் எழுந்துள்ளது. மணிக்கு சுமார் 150 கிமீ வேகம் வரை பந்துவீசி மிரட்டக்கூடிய வீரராக லக்னோவுக்கு கடந்த சீசனில் மயங்க் யாதவ் இருந்தார்.
அதேபோல அதிரடியான பேட்டிங்கில் அசத்தி ஐதராபாத் அணிக்கு நிதிஷ்குமார் ரெட்டி கடந்த சீசனில் நம்பிக்கை அளித்திருந்தார். ஹர்ஷித் ராணாவும் வங்கதேச தொடரில் களமிறங்கும் பட்சத்தில், கேகேஆர் அணியும் அவரை அறிமுகமாகாத வீரராக தங்கள் அணியில் தக்க வைப்பதில் சிக்கல் ஏற்படும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)