Last Updated:
ரசிகர்கள் சிக்சர்களையும், ஃபோர்களையும் அதிகம் பார்க்க விரும்புகிறார்கள். இது மிகப்பெரிய வர்த்தகம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிகளும் சராசரியாக 220 ரன்கள் விளாசி வரும் நிலையில், மைதானங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என்ற ரீதியில் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். மும்பையில் நடைபெற்று முடிந்த போட்டியில் மும்பை அணி டார்கெட் வைத்த 244 டார்கெட்டை ஐதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே சேஸிங் செய்து முடித்தது.
இந்த போட்டி குறித்து முத்தையா முரளிதன் கூறியதாவது-
பவுண்டரி எல்லைகளை விரிவாக்கம் செய்வதால் மட்டுமே ஸ்கோர் அதிகரிப்பதை தடுக்க முடியாது. வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் எல்லைகளை தாண்டி ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கே சிக்சர்களை அடிக்கின்றனர்.
பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் சம வாய்ப்பளிக்கும் மைதானங்கள் இருந்தால், போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் பார்வையாளர்களுக்கு பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சம் கிடைக்குமா என்று சொல்ல முடியாது.
இன்றைக்கு டி20 போட்டிகள் பெரும்பாலும் பொழுதுபோக்கை மையப்படுத்தி நடத்தப்படுகின்றன. ரசிகர்கள் சிக்சர்களையும், ஃபோர்களையும் அதிகம் பார்க்க விரும்புகிறார்கள். இது மிகப்பெரிய வர்த்தகம்.
விளம்பரதாரர்கள், ஒளிபரப்பு செய்பவர்கள், ரசிகர்கள் என எல்லோரும் இதில் பங்கு வகிக்கின்றனர். அதன் அடிப்படையில் குறைவான ஸ்கோர் அடிக்கப்பட்டால் போட்டி மீதான ஆர்வம் குறையலாம். இதனை பவுலர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் புதிய யுக்தியை ஏற்படுத்தியது. இப்போது பல அணிகளும் தங்களது ஸ்டைலை மாற்றி வருகின்றனர். என்று தெரிவித்துள்ளார்.

