Last Updated:
கொல்கத்தா தரப்பில் ஸ்பின்னர்கள் அற்புதமாக பந்து வீசி சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். இளம் வீரர் ஆயுஷ் மத்ரே மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் பவுண்டரியை பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
17 பந்துகளில் 38 ரன்கள் விளாசி மாத்ரே அணியின் ரன் விகிதத்தை மளமளவென உயர்த்தினார். அவருக்கு பின் வந்த வீரர்கள் ஸ்கோரை உயர்த்த தவறினர்.
ஒரு கட்டத்தில் 220 ரன்களுக்கு மேல் சென்னை அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் சென்னை அணியின ரன் குவிப்பு குறைந்தது.
சர்ப்ராஸ் 23 ரன்களும், சிவம் துபே 13 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் ஸ்பின்னர்கள் அற்புதமாக பந்து வீசி சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். தற்போது 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.


