Last Updated:
அமெரிக்க போர்கப்பல்களுக்கு அருகில் வரும் ஈரானியப் போர்க்கப்பல்கள் அழிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகத்திற்குள் கப்பல்கள் சென்று வருவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஈரான் துறைமுகங்களில் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
அதன்படி, இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை அமலுக்கு வந்தது. ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பகுதிகளில் விமானந்தாங்கி கப்பல் உட்பட 15 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது.
முற்றுகையை மீறுவதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு கப்பலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும் இதற்கு ஒத்துழைக்க மறுத்தால், அமெரிக்க கடற்படையினர் பலவந்தமாக அந்த கப்பலில் ஏறி சோதனையிடுவார்கள் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க போர்கப்பல்களுக்கு அருகில் வரும் ஈரானியப் போர்க்கப்பல்கள் அழிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த முற்றுகையால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் தொடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

