Last Updated:
வழக்கான போட்டிகளை விடவும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் பார்க்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், முந்தைய போட்டிகளை விடவும் இன்று சென்னை சேப்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்ததாக ஐபிஎல் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லவுள்ளன. இந்த சுற்றுக்கு லீக் போட்டிகளில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே முன்னேறும்.
நேற்றைய போட்டியில் பஞ்சாபை ஆர்சிபி அணி வென்றதால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி சென்னை அணி 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும். இதேபோன்று ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும்.
இந்த சூழலில் இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்த மேட்ச்சை பார்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரவுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
இதனை உறுதி செய்யும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் வழக்கான போட்டிகளை விடவும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


