Last Updated:
பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஐபில் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாத எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான துவக்கத்தை தந்தார். அவர் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான உர்வில் படேல் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆடி 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இருப்பினும், மிடில் ஆர்டரில் கார்த்திக் சர்மா 19 பந்துகளில் 32 ரன்களும், டெவால்ட் பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் சிவம் துபே 26 ரன்கள் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு கடும் சவாலாக இருந்தார்.
அவருக்கு பக்கபலமாக சாகிப் உசேன் 2 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா மற்றும் பிரஃபுல் ஹிங்கே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதி ஓவர்களில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசியதால், சென்னை அணியால் கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

