இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மேலும், உர்வில் படேல் 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனும், கார்த்திக் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


