Last Updated:
இனறு நடைபெறவுள்ள ஆட்டம் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண்பதற்கு, மைதானத்தில் டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருப்பவர்கள், மெட்ரோ ரயிலில் ஒரு முறை சென்று திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த சலுகையை பெறுவதற்கு டிக்கெட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
டிக்கெட்டில் உள்ள க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாக ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் என்ட்ரி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்வோர் அதற்கு அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.
இதேபோன்று ரசிகர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும் சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெறும்போது மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை அல்லது போட்டி முடிந்து 90 நிமிடங்கள் வரை இயக்கப்படும்.
இனறு நடைபெறவுள்ள ஆட்டம் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தரவரிசை பட்டியலில் முன்னேறும் என்பதால் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.
இதையும் படிங்க – இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் – டெல்லி போலீஸில் புகார்!
சென்னை கடந்த 20 ஆம் தேதி மும்பைக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதேபோன்று கடந்த 23 ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணி மும்பையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
April 25, 2025 2:18 PM IST


