• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 3:44 PM IST

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84) இன்று காலமானார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் பெற்றவர்.

News18News18
News18

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

இவரது மறைவு குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), காலை 10.43 மணிக்கு காலமானார். பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும்.

அவர் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோ, விண்வெளி ஆணையம் மற்றும் விண்வெளித் துறைக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்ட் 27, 2003 அன்று அவர் பதவியில் இருந்து விலகினார். தேசிய கல்விக் கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்குப் பின்னால் இருந்தவர் என்று அறியப்படும் கஸ்தூரிரங்கன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அப்போதைய இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

அவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். அங்கு அவர் INSAT-2, IRS-1A/1B மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்தியாவின் முதல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களான “பாஸ்கரா I” மற்றும் “II” ஆகியவற்றின் திட்ட இயக்குநராக இருந்த அவர், PSLV மற்றும் GSLV ஏவுதல்கள் போன்ற முக்கிய மைல்கற்களை மேற்பார்வையிட்டார். அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

First Published :

April 25, 2025 3:44 PM IST

Read More

Previous Post

பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம்

Next Post

IPL 2025 : சிஎஸ்கே vs ஐதராபாத் மேட்ச்சைக் காண ரசிகர்களுக்கு இலவச பயணம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Next Post
IPL 2025 : சிஎஸ்கே vs ஐதராபாத் மேட்ச்சைக் காண ரசிகர்களுக்கு இலவச பயணம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

IPL 2025 : சிஎஸ்கே vs ஐதராபாத் மேட்ச்சைக் காண ரசிகர்களுக்கு இலவச பயணம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin