• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஐதராபாத் அணிக்கு தொடர்ந்து 4-ஆவது தோல்வி.. 7 விக். வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஐதராபாத் அணிக்கு தொடர்ந்து 4-ஆவது தோல்வி.. 7 விக். வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 06, 2025 11:55 PM IST

சாய் சுதர்சன் 5 ரன்னிலும், ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்த நிலையில் 3.5 ஓவர்களில் குஜராத் அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இது ஐதராபாத் அணியின் 4 ஆவது தொடர் தோல்வியாகும். இதனால் பாயின்ட்ஸ் டேபிளில் தற்போது ஐதராபாத் அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். ஹெட் 8 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 18 ரன்னிலும், இஷான் கிஷன் 17 ரன்னிலும் வெளியேறினர்.

ஓரளவு தாக்குப்பிடித்த நிதிஷ் ரெட்டி 31 ரன்னும், ஹெய்ன்ரிக் கிளாசன் 27 ரன்களும் எடுத்தனர். அனிகேத் வர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடியாக 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 152 ரன்களை எடுத்தது.

குஜராத் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

சாய் சுதர்சன் 5 ரன்னிலும், ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்த நிலையில் 3.5 ஓவர்களில் குஜராத் அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இணைந்த வாஷிங்டன் சுந்தர், கேப்டன் சுப்மன் கில் இணை அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தது.

49 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி வேகத்தில் அனிகேத் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கில் 61 ரன்களும், ரூதர்போர்டு 35 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க – IPL 2025 : நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா?

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது. இது ஐதராபாத் அணி தொடர்ச்சியாக பெறும் 4 ஆவது தோல்வியாகும். இதன் மூலம் கடைசி இடமான 10 ஆவது இடத்திற்கு அந்த அணி சென்றுள்ளது.

First Published :

April 06, 2025 11:55 PM IST

Read More

Previous Post

சிறுபான்மை சமூகத்தில் இருந்து சிபிஎம் தேசிய பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ள முதல் நபர்… யார் இந்த எம்.ஏ பேபி?

Next Post

கோயில் ஒழுங்குமுறை அமைப்பைப் பிரதமர் அலுவலகத்திடம் இந்துச் சங்கம் கோருகிறது – Malaysiakini

Next Post
கோயில் ஒழுங்குமுறை அமைப்பைப் பிரதமர் அலுவலகத்திடம் இந்துச் சங்கம் கோருகிறது – Malaysiakini

கோயில் ஒழுங்குமுறை அமைப்பைப் பிரதமர் அலுவலகத்திடம் இந்துச் சங்கம் கோருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin