• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : உள்ளூர் மைதானத்தில் ஆர்சிபி மோசமான ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி..

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : உள்ளூர் மைதானத்தில் ஆர்சிபி மோசமான ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 02, 2025 11:10 PM IST

பட்லர் 39 பந்துகளில் 6 சிக்சர் 5 பவுண்டரியுடன் 73 ரன்களும், ரூதர்போர்டு 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

சாய் சுதர்சன் - ஜாஸ் பட்லர்சாய் சுதர்சன் - ஜாஸ் பட்லர்
சாய் சுதர்சன் – ஜாஸ் பட்லர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். 7 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலி அர்ஷத் கான் வீசிய பந்தில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து படிக்கல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர் பிலிப் சால்ட் 14 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா வீசிய பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 6.2 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்சிபி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதன் பின்னர் இணைந்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டோன் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜித்தேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குருனால் பாண்டியா 5 ரன்களில் வெளியேறினார்.

கடைசி ஓவர்களில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட லிவிங்ஸ்டோன் 40 பந்துகளில் 5 சிக்ஸர், 1 பவுண்டரி உடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் களமிறங்கினர்.

தொடக்க வீரராக வந்த கேப்டன் சுப்மன் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைந்த சாய் சுதர்சன் – ஜாஸ் பட்லர் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேர்சல் படேல் வீசிய பந்தில் ஜித்தேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் இணைந்த ரூதர்போர்டு – ஜாஸ்பட்லர் இணை ரன்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்த குஜராத் அணி 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பட்லர் 39 பந்துகளில் 6 சிக்சர் 5 பவுண்டரியுடன் 73 ரன்களும், ரூதர்போர்டு 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

First Published :

April 02, 2025 11:10 PM IST

Read More

Previous Post

எந்த பரிந்துரை அடிப்படையில் வக்பு சட்ட மசோதாவில் புதிய திருத்தங்கள்… மக்களவையில் எம்.பி ஆ.ராசா ஆவேசம்

Next Post

பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா | India ranks 3rd in Forbes billionaires list

Next Post
பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா | India ranks 3rd in Forbes billionaires list

பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா | India ranks 3rd in Forbes billionaires list

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin