சுனில் நரேன் 6 ரன்களும், குர்பாஸ் அகமது 39 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழந்தனர். கடைசியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் எடுத்து 10.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றியடைய செய்தனர்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூபாய் 20 கோடி காசோலையும் ஐபிஎல் டிராபியும் பெற்ற தங்களுது வெற்றியைப் பதித்தது. அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றி கொண்டாட்டத்துடன் முதன் முதலாக IPL டிராபியை தன் கையால் தூக்கினார். அதன் பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ரோஜர் இருவரும் இணைந்து டிராபியை வழங்கினார்கள்.
ஐபிஎல் 2024 விருது மற்றும் பரிசு பெற்றவர்களின் விவரங்கள்:
ஃபேர் பிலே விருது- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன்- ரூபாய் பத்து லட்சத்தை பெறுகிறார், நிதீஷ் குமார் ரெட்டி.
பர்பிள் கேப் வின்னர்- ரூபாய் பத்து லட்சத்தை பெறுபவர் ஹர்ஷல் படேல்(24 விக்கெட்)- புவனேஷ் குமார் பெற்றுக்கொண்டார்.
ஆரஞ்சு கேப் வின்னர்- 10 லட்சத்தை பெறுபவர் விராட் கோலி(741 ரன்கள்)- ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றனர்.
மிகவும் மதிப்பு மிக்க வீரர்- ரூபாய் பத்து லட்சத்தை பெறுபவர் சுனில் நரைன்(488 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள்)
மேலும் பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதிற்கான ரூபாய் 50 லட்சம் பரிசு தொகையை பெற்றது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்.
ஐபிஎல் 2024 2 வது இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ரூபாய் 12.5 கோடிக்கான காசோலையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.