Last Updated:
IPL 2025 | 1983 உலகக் கோப்பையை நினைவூட்டும் மதிப்புமிக்க ஐபிஎல் கோப்பை, நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு சமஸ்கிருத மேற்கோளைக் கொண்டுள்ளது.
IPL கோப்பையில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகத்தின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுதோறும், சுமார் இரண்டு மாதங்கள் நடக்கும் ஐபிஎல் போட்டியில், ஏலம் எடுக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இது 2008ல் எட்டு அணிகள் கொண்ட போட்டியாக தொடங்கியது. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய புதிய அணிகள் சேர்க்கப்பட்டதன் மூலம் தற்போது பத்து அணிகளாக உயர்ந்துள்ளது. தற்போது, ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெற்று வருகின்றதன.
ஐபிஎல் தொடங்கியபோது, இந்தியாவின் வரைபடத்தைக் காட்டும் தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஒரு கோப்பையும், ஒரு பேட்ஸ்மேன் இருப்பது போன்றும் கோப்பை காணப்படும். இருப்பினும், அந்த வடிவமைப்பு பின்னர் 1983 உலகக் கோப்பையின் கோப்பையை ஒத்ததாக புதுப்பிக்கப்பட்டது. அதில் சமஸ்கிருத சொற்றொடர் பொறிக்கப்பட்டுள்ளது. “யாத்ரா பிரதிபா அவஸரா பிரப்னோதிஹி” (Yatra Pratibha Avsara Prapnotihi) கோப்பையில் இந்திய வரைபடத்திற்கு அருகில் இடம்பெற்றிருக்கிறது.
போட்டியின் கருப்பொருளை வலியுறுத்துவதே இந்த மேற்கோளைச் சேர்த்ததன் நோக்கம் என்று ஐபிஎல் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த வாசகத்தை நீங்கள் மொழிபெயர்த்தால், ‘திறமை வாய்ப்பை சந்திக்கும் இடம்’ என்று பொருள் வரும். ஒரு நல்ல ஐபிஎல் போட்டி வீரர்களின் பங்கு மதிப்பை அதிகரிக்கிறது மற்றும் அவர்களை கவனிக்க வைக்கிறது என்றார். அதனால் தான் ஐபிஎல், திறமை வாய்ப்பை சந்திக்கும் இடமாகும். மேலும் கோப்பை அந்த கருப்பொருளையும் எதிரொலிக்கிறது என்று அவர் கூறினார்.
Also Read: மற்ற வங்கி ATM-ல் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
வெற்றி பெற்ற ஐபிஎல் கோப்பையை, கேப்டன் அல்லது அந்த அணி வைத்திருப்பதில்லை. அதற்கு பதிலாக, பரிசளிப்பு விழாவிற்குப் பிறகு அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) செல்கிறது. மேலும் வெற்றி பெற்ற அணி தங்கள் வெற்றியைக் கொண்டாட அதேபோன்று ஒரு பிரதியைப் பெறுகிறது. மேலும், அவர்கள் ஆண்டுதோறும் புதிய ஐபிஎல் கோப்பையை உருவாக்குவதில்லை.
ஒவ்வொரு ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகும் சாம்பியன் அணியின் பெயரைச் சேர்த்து, அதே கோப்பையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். புதிய பெயர்களுக்கு இடமில்லாதபோது தான் புதிய வடிவமைப்பு நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
March 26, 2025 11:22 AM IST


