• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Investing in Gold | எஸ்பிஐ கோல்டு ஃபண்டு vs ஆபரணத் தங்கம்: 1 வருடத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் அதிக வருமானம் தருவது எது…?

GenevaTimes by GenevaTimes
March 21, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Investing in Gold | எஸ்பிஐ கோல்டு ஃபண்டு vs ஆபரணத் தங்கம்: 1 வருடத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் அதிக வருமானம் தருவது எது…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோல்டு ஃபண்டு என்பது 1 வருடத்தில், அதிக வருடாந்திர வருமானத்தை (CAGR) தரும் சிறந்த செயல்திறன் கொண்ட ஓர் பரஸ்பர நிதியாகும். மறுபுறம், ஆபரணத் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஆனால், இந்த இரண்டு விருப்பங்களில் ரூ.3,00,000 மொத்த முதலீட்டில், 1 வருடத்தில் எது அதிக வருமானத்தை தந்துள்ளது என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம்தான், தங்கம் வாங்குவதற்கான மக்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. ஆனால், இதற்குப் பின்னால் உலக பொருளாதாரங்களுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு, இந்திய பங்கு சந்தையின் நிலையற்ற செயல்பாடு மற்றும் மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள் போன்ற வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன.

தங்கத்தின் மீதான ஏப்ரல் 4ஆம் தேதி ஒப்பந்தம் ரூ.88,499ஆக உயர்ந்ததால், மார்ச் 18, 2025 எம்சிஎக்ஸ் தங்கம் புதிய உச்சத்தை தொட்டது. டெல்லியில், மார்ச் 18, 2025இல் 10 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கத்தின் விலை ரூ.90,150ஆக இருந்தது. இதேபோல், மும்பையில் ரூ.91,000க்கு அதிகமாகவும், அகமதாபாத்தில் ரூ.94,000க்கு அதிகமாகவும் இருந்தது.

ஒருபுறம் புதிய உச்சத்தை தொட்டு வரும் உயர் செயல்திறன் கொண்ட ஆபரணத் தங்கமும், மறுபுறம், கடந்த 1 வருட வருடாந்திர வருமானத்தின் (CAGR) அடிப்படையில் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கோல்டு மியூச்சுவல் ஃபண்டும் அதிக செயல்திறன் கொண்டுள்ளதை காண முடிகிறது. ஆனால், இந்த இரண்டு விருப்பங்களில் எது 1 வருடத்தில் அதிக வருமானத்தை தந்துள்ளது என்பதை இனி விரிவாக பார்ப்போம்.

இந்த இரண்டு விருப்பங்களில் ஒரு வருடத்திற்கு முன்பாக ஏதேனும் ஒன்றில் ரூ.3 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் எதில் அதிக வருமானம் கிடைத்திருக்கும் என்பதை பின்வரும் கணக்கீட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோல்டு ஃபண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோல்டு டைரக்ட் பிளான்

  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கோல்டு ஃபண்டு, 1 வருட காலத்தில் 32.52 சதவீத வருடாந்திர வருமானத்தை தந்துள்ளது.
  • மேலும் இது, ரூ.3,225 கோடி சொத்துக்களை நிர்வகிக்கிறது. அதே நேரத்தில், மார்ச் 17, 2025 நிலவரப்படி அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ.27.15 கோடியாகும்.
  • உள்நாட்டு ஆபரணத் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது, ​​இந்த கோல்டு ஃபண்டு ஜனவரி 2013இல் தொடங்கப்பட்டதிலிருந்து 7.88 சதவீத வருடாந்திர வருமானத்தை தந்துள்ளது.
  • 0.1 சதவீத செலவு விகிதத்துடன், இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி (SIP) முதலீடாக ரூ.500 மற்றும் குறைந்தபட்ச மொத்தத் தொகையாக (lump sum) ரூ.5,000 முதலீடு செய்யலாம்.
  • ரவிபிரகாஷ் சர்மா இந்த நிதியின் மேலாளர் ஆவார்.
  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கோல்டு ஃபண்டில் ரூ.3,00,000 ஒருமுறை முதலீடு ஒரு வருடத்தில் ரூ.3.98 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: Gold Loan New Rules | தங்க நகைக்கடன்..! ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் யாருக்கு லாபம்?

ஆபரணத் தங்கம்:

  • கடந்த 1 வருடத்தில் மட்டும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
  • முதல் காரணம், இந்தியாவின் முன்னணி பெஞ்ச்மார்க் குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவற்றின் செயல்திறன் சீரற்ற முறையில் இருக்கும் வேளையில், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
  • இரண்டாவது காரணம், உலகெங்கிலும் உள்ள முன்னணி பொருளாதாரங்கள் மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் ஆகியவை அடங்கும்.
  • இதன் விளைவாக தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. புது டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், 1 வருட காலத்தில் ரூ.76,590இல் இருந்து ரூ.90,150ஆக உயர்ந்து 17.70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதையும் படிக்க: Health insurance | மருத்துவக் காப்பீடு பெறப் போறீங்களா…? முடிவெடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 5 ரைடர்கள்…!

24 காரட் தங்கத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டின் மதிப்பு

  • ஒரு வருடத்திற்கு முன்பு, ரூ.3,00,000 முதலீட்டில் ஒருவர், 39.17 கிராம் 24 காரட் தங்கத்தை வாங்கியிருக்க முடியும்.
  • ஆனால், இன்றைய விகிதத்தின்படி, அதே முதலீட்டில் 33.30 கிராம் வரை வாங்க முடியும்.
  • எனவே, ரூ.3,00,000 முதலீட்டில் வாங்கப்பட்ட தங்கத்தின் ஒரு வருடத்திற்குப் பிந்தைய மதிப்பு ரூ.3,53,117.55 என மதிப்பிடப்பட்டுள்ளது.

முடிவாக, எஸ்பிஐ கோல்டு ஃபண்ட், ஒரு வருட காலத்தில் ரூ.3,00,000 முதலீட்டில் ஆபரணத் தங்கத்தை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

First Published :

March 21, 2025 4:25 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Investing in Gold | எஸ்பிஐ கோல்டு ஃபண்டு vs ஆபரணத் தங்கம்: 1 வருடத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் அதிக வருமானம் தருவது எது…?

Read More

Previous Post

IPL 2025 | ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரர் யார் தெரியுமா?

Next Post

US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு – தடை விதித்த நீதிமன்றம்!

Next Post
US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு – தடை விதித்த நீதிமன்றம்!

US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு - தடை விதித்த நீதிமன்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin