Last Updated:
ரயில்வேயில் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் தவறானது என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ் விளக்கமளித்துள்ளார். பணியிட மாற்றம் செய்தால் தான் புதிய காலிப்பணியிடங்கள் உருவாகும் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டிளித்தார்..
ரயில்வேயில் 30 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் தவறானது எனக் கூறியுள்ள ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ், பணியிட மாற்றம் செய்யவே அறிவுறுத்தப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய ரயில்வே பணியாளர்களில் 2% பணியிடங்களை சரண்டர் செய்யுமாறு ரயில்வே மண்டலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில் தெற்கு ரயில்வேயில் ஆயிரத்து 906 பணியிடங்களை ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால், ரயில்வே நிர்வாகம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியதாக தகவல் வெளியானது.
ரயில்வேயில் 2% ஆட்குறைப்பு என்பது தவறான தகவல்; 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை Non Essentional பிரிவில் 2% பணியிடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்; இது வழக்கமான நடைமுறைதான்; பணியிட மாற்றம் செய்தால் தான் புதிய காலிப்பணியிடங்கள் உருவாகும் – ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ் நியூஸ் 18… pic.twitter.com/epRYdILKN0
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 25, 2026
இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ், பணியிட மாற்றம் செய்யவே அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார்.
Delhi,Delhi,Delhi

