
Last Updated:
இந்தியா – இங்கிலாந்து 2வது டி20 போட்டியில், திலக் வர்மாவின் 72 ரன்கள் மூலம் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-0 முன்னிலையில் உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் முதல் டி20 போட்டியில் விளையாடிய நிதிஷ் குமார், ரிங்கு சிங் அணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜேரல் அணியில் இடம் பெற்று இருந்தனர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து ஓபனர்கள் பிலிப் சால்ட் மற்றும் பென் டாக்கட் ஆரம்பமே விக்கெட்களை பறிகொடுத்தனர். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினாலும் இங்கிலாந்து அணி அதிரடியாகவே பேட்டிங் செய்து வந்தது.
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்களை குவித்து நல்ல அடிதளம் அமைத்து கொடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. சேப்பாக்கம் மைதானம் வழக்கம் போல் சூழலுக்கு சாதகமாகவே இருந்தது. அக்ஷர் படேல், வருண் சக்கரவரத்தி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் முன் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன்(5), அபிஷேக் ஷார்மா (12), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12), துருவ் ஜேரல் (4), ஹர்திக் பாண்டியா(7) என ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மூன்றாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தும் இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார்.
பரபரப்பாக சென்றை இந்த போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் வெற்றி 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை திலக் வர்மா எதிர்கொள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் பந்துவீசினார். முதல் பந்தில் 2 ரன்களும், 2வது பந்தில் பவுண்டரி விளாசி இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி வைத்தார். திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Chennai,Tamil Nadu
January 25, 2025 10:35 PM IST

