• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Health insurance | மருத்துவக் காப்பீடு பெறப் போறீங்களா…? முடிவெடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 5 ரைடர்கள்…!

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Health insurance | மருத்துவக் காப்பீடு பெறப் போறீங்களா…? முடிவெடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 5 ரைடர்கள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனால், இங்கு இருக்கும் முக்கிய சிக்கல் என்னவென்றால், ஒருவர் முதல்முறையாக மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதுதான். மேலும், புதிய காப்பீட்டாளருக்கு இது கடினமானதாக இருக்கலாம். எனினும், மருத்துவ காப்பீட்டில் இணையும்போது, ​​பாலிசியில் எவ்வளவு மற்றும் எப்போது செலவிட வேண்டும் என்பதை பயனர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில், பாலிசியின் பல்வேறு நன்மைகள், வெளிநோயாளிகள் பிரிவு பராமரிப்பு, நோ க்ளைம் போனஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ரைடர்களை மக்கள் பெறுகிறார்கள். இது எவ்வளவு பயனுள்ளது? ரைடர்கள் என்றால் என்ன? ஒரு நபர் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் என்னென்ன ரைடர்களைப் பெற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே, ஒரு மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதற்கு முன், ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய ரைடர்கள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

ரைடர்கள் என்றால் என்ன?

மருத்துவக் காப்பீட்டில் ரைடர்களைச் சேர்ப்பது, ஒருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான காப்பீட்டைப் பெற உதவும். இதன் மூலம் ஒட்டுமொத்த நிதிப் பாதுகாப்பையும், மன அமைதியையும் மேம்படுத்த முடியும். காப்பீட்டைப் பொறுத்தவரையில், “ரைடர்” என்பது கூடுதல் பாதுகாப்பு அல்லது நன்மைகளை வழங்கும் ஒரு அடிப்படை பாலிசியின் கூடுதல் அம்சமாகும். இது ஒருவரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் அபாயங்களை பூர்த்தி செய்ய உங்கள் காப்பீட்டுத் திட்டத்தை தனிப்பயனாக்கம் செய்ய அனுமதிக்கிறது.

மகப்பேறு காப்பீடு

அனைவருக்குமே மருத்துவக் காப்பீடு தேவைதான் என்றாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காப்பீடு அவசியம். இது பிரசவக் கட்டணம், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகள், பராமரிப்பு மற்றும் சில சூழ்நிலைகளில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான செலவுகள் போன்ற மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. இந்தக் காப்பீடானது, காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து 9 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரையிலான காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கிடைக்கும்.

தீவிர நோய் காப்பீடு அல்லது தனிப்பட்ட விபத்துக் காப்பீடு

இதய நோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற தீவிரமான நோயால் ஒருவர் பாதிக்கப்படும் போது, காப்பீட்டுத் தொகைக்கு சமமான ஒரு மொத்தத் தொகையை இந்த ரைடர் பாலிசிதாரருக்கு வழங்குகிறது. 90 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் வரும் இந்த தீவிர நோய் காப்பீடானது, க்ளைம் பெறப்பட்ட பிறகு இல்லாமல் போகும். இது ஒருவரின் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்துவதோடு மட்டுமின்றி, நோயிலிருந்து குணமடையும்போது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை முறையைப் பராமரிப்பதற்கு ஒரு அவசரகால நிதியாக வரும். ஒருவரது குடும்பத்தில் தீவிரமான நோய்களின் வரலாறு இருந்தால் அல்லது உடல்ரீதியாக ஒருவர் ஆபத்தை எதிர்கொண்டால் அல்லது உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை தரும் வேலைகளைச் செய்தால், இந்த ரைடரைப் பெறுவது வசதியாக இருக்கும்.

இதையும் படிக்க: 2025 ஏப்ரல் முதல் புதிய TDS விதிகள் நடைமுறை.. முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

மருத்துவமனை ரொக்க காப்பீடு

மருத்துவமனை செலவுகளின் உண்மையான அளவைப் பொருட்படுத்தாமல், மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பாலிசிதாரருக்கு உத்தரவாதமான தினசரி ரொக்கப் பலனை வழங்குவதில் இந்த அம்சம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பயணம், உணவு மற்றும் நிலையான மருத்துவக் காப்பீட்டின் கீழ் பொதுவாக உள்ளடக்கப்படாத பிற செலவுகளைச் சமாளிக்க இந்த பணம் உதவியாக இருக்கும். இந்த ரைடரை செயல்படுத்த காப்பீடு செய்யப்பட்ட நபர் குறைந்தது 24 மணி நேரம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

அறை வாடகையில் விலக்கு

மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளி, ஒவ்வொரு நாளும் செலுத்த வேண்டிய அறை வாடகையில் இருந்து விலக்கு பெற இந்த ரைடர் உதவியாக இருக்கும். இதனால், பாலிசிதாரர்கள் கூடுதல் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சிறந்த சிகிச்சையைத் தேர்வு செய்ய முடியும். இது அறை வாடகை வகையின் மீதான அனைத்து விதமான கட்டுப்பாட்டையும் நீக்குகிறது. காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் சேரும்போது கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் தங்களின் விருப்பப்படி மருத்துவமனை அறையில் தங்குவதற்கு இது வழிசெய்கிறது.

இதையும் படிக்க: ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே.. செல்போனுக்கு வந்த மெசேஜ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

வெளிநோயாளிகள் பிரிவு

குறிப்பாக, குழந்தைகளைக் கொண்ட இளம் தம்பதிகளுக்கு வெளிநோயாளிகள் பிரிவு கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற காலத்தில் இந்த ரைடர் முக்கியப் பங்கு வகிக்கும். மருத்துவர் வருகை, நோயறிதல் சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் போன்ற மருத்துவச் செலவுகளைச் செலுத்த ஓபிடி ரைடர் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் உங்கள் பாக்கெட்டிலிருந்து செலுத்த வேண்டிய திடீர் செலவுகளைத் தவிர்க்க முடியும். அடிக்கடி மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் குறைந்த விலை சிகிச்சைகளுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

First Published :

March 19, 2025 4:19 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Health insurance | மருத்துவக் காப்பீடு பெறப் போறீங்களா…? முடிவெடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 5 ரைடர்கள்…!

Read More

Previous Post

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டி விளையாட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பாண்டியாவுக்கு தடை! புதிய கேப்டன் யார்?

Next Post

‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க் | Joe Biden Rejected Sunita Williams earlier return Offer Says Elon Musk 

Next Post
‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க் | Joe Biden Rejected Sunita Williams earlier return Offer Says Elon Musk 

‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க் | Joe Biden Rejected Sunita Williams earlier return Offer Says Elon Musk 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin