• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க் | Joe Biden Rejected Sunita Williams earlier return Offer Says Elon Musk 

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க் | Joe Biden Rejected Sunita Williams earlier return Offer Says Elon Musk 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸின் கோரிக்கையை அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நிராகரித்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எஸ்க் சிஇஓ மஸ்க் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக இப்போதைய அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தங்கி இருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தில் திரும்பிய இருவரும் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் இறங்கினர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எஸ்க் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “மற்றொரு விண்வெளி வீரரை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வந்ததற்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்கு அதிபர் ட்ரம்புக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விண்வெளி வீரர் சுனிதாவை முன்பே பூமிக்கு திரும்பி அழைத்து வரும் கோரிக்கையை முந்தைய அதிபர் ஜோ பைடன் நிராகரித்ததாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், “விண்வெளி வீரர்களை முன்பே பூமிக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் முன்வந்தோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விண்வெளி வீரர்கள் அங்கு 8 நாட்கள் மட்டுமே தங்கி இருந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள் சுமார் 10 மாதங்கள் அங்கிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் இதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஸ்பேஸ் எக்ஸ் சில மாதங்களுக்கு முன்பே விண்வெளி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்து வந்திருக்க முடியும். நாங்கள் அந்தக் கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் முன்வைத்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கோரிக்கை நிகாரிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி மாதத்தில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், “கடந்த 2024 ஜுன் முதல் விண்வெளியில் இருந்து வரும் விண்வெளி வீரர்களை விரைவில் பூமிக்கு திரும்ப அழைத்து வருமாறு அதிபர் தன்னிடம் கேட்டுக்கொண்டார். ஜோ பைடன் நிர்வாகம் அவர்களை இவ்வளவு நாள் அங்கே விட்டு வைத்தது கொடுமையானது” என்று தெரிவித்திருந்தார்.

இதனை அப்போது அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார். அவர், “பைடன் நிர்வாகத்தினால் விண்வெளியில் கைவிடப்பட்ட துணிச்சலான இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும்படி, எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் கேட்டுள்ளேன். அந்தத் திட்டம் விரைவில் தொடங்கும்.”என்று தெரிவித்திருந்தார்.



Read More

Previous Post

Health insurance | மருத்துவக் காப்பீடு பெறப் போறீங்களா…? முடிவெடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 5 ரைடர்கள்…!

Next Post

Salim Fateh Din dilantik pengerusi Lembaga Penasihat Pencegahan Rasuah | Makkal Osai

Next Post
Salim Fateh Din dilantik pengerusi Lembaga Penasihat Pencegahan Rasuah | Makkal Osai

Salim Fateh Din dilantik pengerusi Lembaga Penasihat Pencegahan Rasuah | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin