அதன்பின்னர், தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, நேற்று (அக்.23) ஒரே நாளில் கிராமுக்கு 175 ரூபாய் குறைந்து 13,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 1,400 ரூபாய் குறைந்து 1,04,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படியாக சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த 13 நாட்களில் சவரனுக்கு 6,560 ரூபாய் குறைந்தது.


