Last Updated:
சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீனாவின் திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு உட்பட்ட நாக்சு நகரின் பாசென் கவுன்ட்டியில் வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் ரிக்டர் அளவில் 7.0 அலகுகளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
நிலப்பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 339 வீடுகளும், 20 கால்நடை கொட்டகைகளும் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகின. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகக் கட்டடங்களின் சுவர்களில் பலத்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

