நேற்று முன் தினம் மட்டுமே தங்கம் விலை 2 முறை சரிவை கண்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.


