• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம்; இந்தியா கூட்டணியின் அடுத்தக் கட்ட நகர்வு என்ன? – மல்லிகார்ஜுன வெளியிட்ட அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம்; இந்தியா கூட்டணியின் அடுத்தக் கட்ட நகர்வு என்ன? – மல்லிகார்ஜுன வெளியிட்ட அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 30, 2026 3:12 PM IST

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லவும், குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

News18
News18

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அக்டோபர் 6 அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளனர். மேலும், அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அவரிடம் முறையிடுவதற்கு நேரம் கேட்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தப்பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “உண்மையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள இரண்டு அல்லது மூன்று நபர்கள் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். அதேவேளையில் அமித் ஷாவும், மோடியும் அவர்களைக் கைப்பாவைகளைப் போல ஆட்டிப்படைக்கின்றனர். இந்தப் போராட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் பேசின.

இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டம் நடத்தவுள்ளனர். மேலும், அக்டோபர் 6 அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளனர். மேலும், அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அவரிடம் முறையிடுவதற்கு நேரம் கேட்க இருக்கிறோம்.

#WATCH | Delhi | After the INDIA alliance meeting, Congress President Mallikarjun Kharge says, “Members of the INDIA bloc will stage protests at DM offices from October 2 to October 8, and on October 6, all opposition MPs will march to the Election Commission.


Opposition leaders… pic.twitter.com/yHAbVfQ1Jd

— ANI (@ANI) September 30, 2026

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐந்து முக்கிய பேரணிகள் நடத்தப்படவுள்ளன. அவற்றிற்கான இடங்கள் மற்றும் தேதிகள் விரைவில் இறுதி செய்யப்படும். வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் முன்பு கூறியதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்வதால், நவம்பர் 1 அன்று டெல்லியில் ஒரு முக்கிய பேரணி ஏற்பாடு செய்ய இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

#WATCH | Delhi | After INDIA alliance meeting, Congress MP & LoP, Lok Sabha, Rahul Gandhi says, “It is the personal commitment of all INDIA leaders that we are going to ensure that the people who have destroyed Indian democracy are punished. It doesn’t matter how senior they are,… pic.twitter.com/UlUTggubmv


— ANI (@ANI) September 30, 2026

இதேபோல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைத்தவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வது இந்தியா கூட்டணியின் அனைத்துத் தலைவர்களின் தனிப்பட்ட உறுதிப்பாடாகும். தேர்தல்கள் திருடப்பட்டுவிட்டன என்றும், நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தைச் சிதைத்துவிட்டனர் என்றும் இந்திய மக்களிடம் எடுத்துரைப்பதில் எதிர்க்கட்சிகள் வெற்றியைப் பெற்றுள்ளன என்ற உணர்வை ஆலோசனை கூட்டத்தில் உணரமுடிந்தது. அதேவேளையில், இந்தியாவில் நடைபெறுபவை தவறானவை என்றும் அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கருதும் ஒரு புதிய எதிர்ப்பு உணர்வு, குறிப்பாக இளைஞர்களிடையே எழுந்துள்ளது என்பதும் உணரப்பட்டது” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

ரணிலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Next Post

Gold Price Today | மாத கடைசி.. தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Today | மாத கடைசி.. தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Today | மாத கடைசி.. தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin