செயற்கை தொழில்நுட்பம், மின்மயமாக்கல், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக உலக நாடுகள் மூலதனத்தை அதிகமாக செலவழிக்க தொடங்கியுள்ளன. இதனால், தாமிரம், அலுமினியம், யுரேனியம் மற்றும் மின்சாரம் தொடர்பான உலோகங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது. இந்த முதலீடுகள் பொருளாதாரத்தை வளர்க்கும் அதேநேரத்தில், வட்டி விகிதங்களை உயர்த்தும். இது மறைமுகமாக தங்கம் விலையை குறைக்கும் என்று கூறுகிறது.


