• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்! | Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்! | Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்!

தங்கம் விலை குறைவதால் இந்திய மக்கள் மத்தியில் கலவையான மனநிலை ஏற்பட்டு உள்ளது, ஜூன் மாதத்திற்கு பின்பு இந்தியாவில் தங்கம் விலை பெரும் சரிவை செப்டம்பர் மாதம் பதிவு செய்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் காரணத்தால் கடந்த 10 வருடத்தில் அதிகப்படியான வட்டி வருமானம் அமெரிக்க அரசு பத்திரத்தில் கிடைக்கிறது.

இதனால் உலகளாவிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி போன்றவற்றில் இருந்து முதலீட்டை வெளியேற்றி அமெரிக்க பத்திர சந்தையில் குவித்து வருகின்றனர். அமெரிக்கா தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விரைவில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்!

இதற்கிடையில் ஈரான் போர் மூலம் கச்சா எண்ணெய் உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்திற்கான தேவை சற்றும் அவசியமற்றதாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் மாதமும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்மாதத்தின் முதல் நாளே கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 14,924 ரூபாயாக உள்ளது.

ஆனால் இந்தியாவில் தற்போது மிகவும் முக்கியமான பண்டிகை காலம் + திருமண சீசன் என்பதால் ரீடைல் சந்தையில் டிமாண்ட் அதிகரிக்கும். டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் ரீடைல் சந்தையில் அதிகரிக்கும் டிமாண்ட் தங்கம் விலையை உயர்த்தலாம் அல்லது விலை சரிவை கட்டுப்படுத்தலாம் என நிலைப்பாடும் சந்தை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

தற்போது தசரா, அட்சய திருதியை, தீபாவளி ஆகிய 3 முக்கிய பண்டிகை வரும் காரணத்தாலும், இது அதிகளவில் திருமணம் நடக்கும் காலக்கட்டம் என்பதால் அக்டோபர் மாதத்தில் தங்கம் விலையின் போக்கு தீபாவளிக்கு பெரும் திருப்பத்தை சந்திக்க உள்ளது.

மேலும் தங்கம் மீதான முதலீட்டை பாதிக்கும் வகையில் ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் என பல காரணிகள் இருக்கும் காரணத்தால் தங்கத்தின் போக்கை சரியாக கணிப்பது தற்போதைய சூழ்நிலையில் கடினம்.

செப்டம்பர் மாதம் ஸ்பாட் சந்கையில் தங்கம் விலை 6.5 சதவீதம் சரிந்திருக்கும் வேளையில், இந்திய ரீடைல் சந்தையில் டாலர் – ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவின் காரணமாக தங்கம் விலையில் ரீடைல் சந்தையில் 3.28 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

இதனால் அக்டோபர் மாதம் தங்கம் விலை சரிவை பயன்படுத்தி நீண்ட கால அடிப்படையில் தங்கம் வாங்குவோருக்கு பெரும் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கோல்டுமேன் சாக்ஸ் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள்ள 4100 டாலருக்கு வர்த்தகமாக ஒகு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 5200 டாலர் வரையில் உயரும் என தனது கணிப்பை வெளியிட்டு இருந்தாலும், உலகளவில் அதிகரித்து வரும் கடன் பெரும் நெருக்கடியாக மாறினால் மீண்டும் தங்கம் முக்கிய முதலீடாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

Share This Article

English summary

Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season

Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season — Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்!

Story first published: Thursday, October 1, 2026, 20:47 [IST]

Other articles published on Oct 1, 2026

Read More

Previous Post

மகளிர் கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளிலும் ஜியோ ஸ்டார் முதலீட்டை அதிகரிக்கும்.. சி.இ.ஓ. இஷான் சாட்டர்ஜி நம்பிக்கை | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக தமிழில் சத்குருவின் மஹாசத்சங்கம்: அக்டோபர் 8-இல் மலேசியாவில் நடைபெற உள்ளது! | Makkal Osai

Next Post
இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக தமிழில் சத்குருவின் மஹாசத்சங்கம்: அக்டோபர் 8-இல் மலேசியாவில் நடைபெற உள்ளது! | Makkal Osai

இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக தமிழில் சத்குருவின் மஹாசத்சங்கம்: அக்டோபர் 8-இல் மலேசியாவில் நடைபெற உள்ளது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin