Last Updated:
போருக்குப் பிறகு தங்கள் அடிப்படை தேவைகளுக்கே இன்னும் போராடி வரும் காசா மக்கள், வாக்களிக்கும் வாய்ப்பை வரவேற்றனர்.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு காசாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வாக்களித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி முதல்முறையாக மேற்கு கரை மற்றும் காசாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் சுமார் ஒன்றரை லட்சம் பேரும், காசாவின் Deir el-Balah பகுதியில் 70 ஆயிரம் பேரும் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
Palestinians are voting in Gaza’s first municipal elections in 21 years. Around 70,000 people are registered to vote, with councils elected through a list system requiring female representation, as residents attempt to restore local governance despite ongoing Israeli attacks. pic.twitter.com/1tFXqsiHmg
— Al Jazeera English (@AJEnglish) April 25, 2026
இந்த தேர்தலில் ஹமாஸ் தரப்பு வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேற்கு கரைக்கு உட்பட்ட ரமல்லா பகுதியில் வாக்களித்த பின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். போருக்குப் பிறகு தங்கள் அடிப்படை தேவைகளுக்கே இன்னும் போராடி வரும் காசா மக்கள், வாக்களிக்கும் வாய்ப்பை வரவேற்றனர்.

