• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

FIFA World Cup 2026 Final: சரித்திரம் படைத்த ஸ்பெயின்…. அர்ஜென்டினா ஏமாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
FIFA World Cup 2026 Final: சரித்திரம் படைத்த ஸ்பெயின்…. அர்ஜென்டினா ஏமாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 20, 2026 3:46 AM IST

இதன் மூலம், 2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்று வரலாறு படைத்துள்ளது. மறுபுறம், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் லியோனல் மெஸ்ஸியின் கனவு ஏமாற்றத்தில் முடிந்தது.

News18
News18

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற உச்சக்கட்ட பரபரப்பான ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை முத்தமிட்டுள்ளது.

இந்த மாபெரும் இறுதிப்போட்டியைக் காண அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் வருகை தந்திருந்தார். அரங்கில் அவரது இருப்பு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மெஸ்ஸி vs லமீன் யமால் – ஸ்பெயினின் ஆதிக்கம்: கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான லியோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் இளம் புயலான லமீன் யமாலுக்கும் இடையேயான ‘தலைமுறைகளின் மோதலாகவே’ இது பார்க்கப்பட்டது. ஆட்டம் துவங்கியது முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. தொடக்கம் முதலேயே ஸ்பெயின் அணி பந்து கட்டுப்பாட்டில் முழு ஆதிக்கம் செலுத்தியது. மறுபுறம், ஸ்பெயினின் அதிரடி ஆட்டத்தை முறியடிக்க முடியாமலும், இலக்கை நோக்கி பந்தை உதைக்க முடியாமலும் அர்ஜென்டினா திணறியது.

அர்ஜென்டினாவின் முக்கிய தடுப்பாட்ட வீரர் லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் 41-வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்று, தந்திரோபாய மாற்றமாக 43-வது நிமிடத்தில் மாற்று வீரராக வெளியேற்றப்பட்டார்.

இரண்டாம் பாதியிலும் ஸ்பெயின் அணியின் நடுகள மற்றும் முன்கள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே ஆட்டத்தின் பெரும்பகுதி இருந்தது. ஸ்பெயினின் இந்த உத்தியை முறியடிக்க அர்ஜென்டினா அணி தொடர்ந்து மாற்று வீரர்களைக் களமிறக்கிய போதிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. 90 நிமிட முழு நேர முடிவில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமநிலையில் முடிந்தது.

வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் 30 நிமிட கூடுதல் நேரத்திற்கு (Extra Time) நகர்ந்தது. முன்னதாக, 93-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நடுகள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் ‘ரெட் கார்டு’ கொடுக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், அர்ஜென்டினா 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஒரு வீரர் குறைவு என்பதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின் அணி, தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் முன்கள வீரர் ஃபெர்ரான் டோரஸ் (Ferran Torres) அர்ஜென்டினாவின் தடுப்பரணைத் தகர்த்து, அற்புதமான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எஞ்சிய நிமிடங்களில் அர்ஜென்டினா எவ்வளவோ போராடியும் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்ய முடியவில்லை. இறுதி விசில் ஊதப்பட்டதும் ஸ்பெயின் வீரர்கள் கண்ணீருடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் மூலம், 2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது இரண்டாவது உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்று வரலாறு படைத்துள்ளது. மறுபுறம், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் லியோனல் மெஸ்ஸியின் கனவு ஏமாற்றத்தில் முடிந்தது.

Read More

Previous Post

இதுதான்டா ரோகித் சர்மா.. லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர்.. கம்பீர் முகத்தில் கரி | Rohit Sharma: Rohit Sharma becomes the first Indian Player to score an ODI Century in Lords Stadium

Next Post

முதலீட்டு மோசடியில் கம்பார் ஓய்வூதியதாரர் RM150,00 இழந்தார்

Next Post
முதலீட்டு மோசடியில் கம்பார் ஓய்வூதியதாரர் RM150,00 இழந்தார்

முதலீட்டு மோசடியில் கம்பார் ஓய்வூதியதாரர் RM150,00 இழந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin