• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இதுதான்டா ரோகித் சர்மா.. லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர்.. கம்பீர் முகத்தில் கரி | Rohit Sharma: Rohit Sharma becomes the first Indian Player to score an ODI Century in Lords Stadium

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இதுதான்டா ரோகித் சர்மா.. லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர்.. கம்பீர் முகத்தில் கரி | Rohit Sharma: Rohit Sharma becomes the first Indian Player to score an ODI Century in Lords Stadium
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, July 19, 2026, 22:33 [IST]

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ரோகித் சர்மா ஓய்வு பெறப் போவதாக சொல்லப்பட்ட நிலையில், முக்கியமான போட்டியில் சதம் விளாசி மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்களையும், பெத்தல் 93 பந்துகளில் 91 ரன்களையும், ஜோ ரூட் 74 ரன்களையும் விளாசினர்.

Rohit Sharma

இதன்பின் 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட் கொடுக்க கூடாது என்பதால், ரோகித் சர்மா கூடுதல் நிதானத்துடன் ஆடினார். ஆனால் டங்க் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அதிரடியை தொடங்கினார். பின்னர் சாம் கரண் பவுலிங்கிலும் பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசி தள்ளினார்.

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 50 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் ரோகித் சர்மா விண்டேஜ் ஆட்டத்தை ஆட தொடங்கினார். அதிலும் 70 ரன்களுக்கு மேல் விளாசிய பின், ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். இதன்பின் ரோகித் சர்மா 84 பந்துகளில் தனது 34வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ரோகித் சர்மா ஓய்வை நோக்கி தள்ளப்படுவதாக பேசப்பட்டு கொண்டே இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் ரோகித் சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் இங்கிலாந்து அணி 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்த போது கொஞ்சம் கூட பதறாமல் சேஸிங்கை கட்டமைத்து கொடுத்திருப்பது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

English summary

Rohit Sharma: Rohit Sharma becomes the first Indian Player to score an ODI Century in Lords Stadium

Read More

Previous Post

பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்…!

Next Post

FIFA World Cup 2026 Final: சரித்திரம் படைத்த ஸ்பெயின்…. அர்ஜென்டினா ஏமாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
FIFA World Cup 2026 Final: சரித்திரம் படைத்த ஸ்பெயின்…. அர்ஜென்டினா ஏமாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

FIFA World Cup 2026 Final: சரித்திரம் படைத்த ஸ்பெயின்.... அர்ஜென்டினா ஏமாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin