Last Updated:
ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் அணிக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படும். அமெரிக்க பாணியில் 2026 மோதிரங்கள் தயாரிக்கப்படும்.
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ‘சாம்பியன்ஷிப் மோதிரங்கள்’ வழங்கப்படவுள்ளன.
அமெரிக்காவில் நடைபெறும் பேஸ்பால், கூடைப்பந்து உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகளில் வெற்றி பெறுவோருக்கு ‘சாம்பியன்ஷிப் மோதிரங்கள்’ வழங்குவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது. தற்போது, அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் நிலையில், FIFA-வின் 96 ஆண்டு கால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க பாணியில் சாம்பியன் அணி வீரர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இந்த மோதிரத்தின் ஒரு பக்கத்தில் உலகக் கோப்பை வடிவமும், மறுபுறம் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் சிறப்பம்சமும் பொறிக்கப்படும். போட்டி முடிந்தவுடன் வெற்றி பெற்ற அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளருக்கு மட்டும் தற்காலிகமாக மோதிரங்கள் வழங்கப்பட்டு, பின்னர் மாற்றம் செய்யப்பட்ட புதிய மோதிரங்கள் வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் ஆண்டை குறிக்கும் வகையில் மொத்தம் 2026 மோதிரங்கள் தயார் செய்யப்பட்டு, அதில் வெற்றி பெறும் அணிக்கு 30 மோதிரங்கள் வழங்கப்படும் எனவும், மீதம் உள்ள 1,996 மோதிரங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் FIFA தெரிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


