Last Updated:
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வென்றது. அர்ஜென்டினா வீரர் ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்ததால் மோதல் ஏற்பட்டது.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குப் பிறகு, ஸ்பெயின் வீரரின் கழுத்தை அர்ஜென்டினா வீரர் நெரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது. கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் மார்க், விதிமுறைகளை மீறி வாயை மூடிக்கொண்டு பேசியதாகக் கூறி, அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது போட்டி முடிவடைந்ததாக நடுவர் விசில் ஊதிய நிலையில் ஸ்பெயின் அணியின் மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கினர். அப்போது ஸ்பெயின் வீரர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து அர்ஜென்டினா வீரர் தள்ளியதால், இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் உருவானது.
இந்த மோதல் பரிசளிப்பு விழாவின் போதும் தொடர்ந்தது. ஸ்பெயின் வீரர்கள் கோப்பையைப் பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, அர்ஜென்டினா வீரர்கள் தங்களது முதுகைக் காட்டிக் கொண்டு நின்றனர். அர்ஜென்டினா வீரர்களின் இந்த செயலுக்கு கால்பந்து வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் களம் இறங்கின. ஆட்டம் தொடங்கிய முதல் வினாடியில் இருந்து பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின், அடுத்தடுத்த ஷாட்டுகளைப் பறக்கவிட்டது. ஆனால், அர்ஜென்டினாவின் நட்சத்திர கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், அனைத்து கோல் முயற்சிகளையும் மிகச் சாதுரியமாகத் தடுத்து நிறுத்தி, ஆட்டத்தின் 90 நிமிடங்கள் வரை கோல் எதுவுமின்றி சமனில் வைத்திருந்தார்.
இதற்கிடையே, அர்ஜென்டினா வீரர் என்ஸோ பெர்னாண்டஸ், ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் அர்ஜென்டினா அணி 10 வீரர்களோடு விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றபோது ஸ்பெயின் வீரர் ஃபெர்ரான் டோரஸ் வரலாற்று சிறப்புமிக்க கோலை அடித்தார். இதனால் 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தைத் தட்டித் தூக்கியது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


