• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

EXPLAINER | இணைய ஆதிக்கமா, நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் பற்றி எலான் மஸ்க்கே வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
EXPLAINER | இணைய ஆதிக்கமா, நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் பற்றி எலான் மஸ்க்கே வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போர் நேரத்தில் மஸ்க் வைத்த செக்…

மார்ச் 2025-ல், உக்ரைன் ராணுவத்திற்கு மஸ்க் ஒரு செக் வைத்தார். அதில் முக்கியமாக, “உக்ரைன் ராணுவத்திற்கு, எனது ஸ்டார்லிங்க் அமைப்புதான் முதுகெலும்பு. ஒருவேளை நான் அதை முடக்கிவிட்டால், அவர்களின் முழு முன்னணிப் படையும் சரிந்துவிடும்” என்றார் மஸ்க். அதற்குக் காரணம் பிப்ரவரி 2022-ல் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உக்ரேனியப் படைகள் தங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் உள்ளிட்ட போர்க்களத் தகவல் தொடர்புகளுக்கு ஸ்டார்லிங்கை பெரிதும் நம்பியிருந்தன. இதை காரணமாக வைத்து உக்ரைனை மிரட்டிய மஸ்க், பின்னர் உக்ரேனிய முனையங்களின் இணைப்பைத் துண்டிக்கப் போவதில்லை என்று கூறினார்.

I literally challenged Putin to one on one physical combat over Ukraine and my Starlink system is the backbone of the Ukrainian army. Their entire front line would collapse if I turned it off.


What I am sickened by is years of slaughter in a stalemate that Ukraine will inevitably lose.

Anyone who really cares, really thinks and really understands wants the meat grinder to stop.

PEACE NOW!!

— Elon Musk (@elonmusk) March 9, 2025

உக்ரைன் – ரஷ்யா மட்டுமல்ல, ஈரான் – இஸ்ரேல் போரின் போது மஸ்க்கின் ஸ்டார்லிங்க் முக்கியமான சில விஷயங்களை செய்தது. துல்லியமாக கவனித்தல் 2022-ம் ஆண்டு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, எலான் மஸ்க் ஈரானில் ஸ்டார்லிங்க் சேவையைச் செயல்படுத்தினார். இதன் மூலம் ஸ்டார்லிங்க் கருவிகளைப் பெற்றிருந்த போராட்டக்காரர்கள், அரசு விதித்த இணையக் கட்டுப்பாடுகளைத் தாண்டி இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. அதேபோல மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஜூன் மாதம் ஈரான்–இஸ்ரேல் போர் தொடங்கிய ஒரு நாளுக்குள்ளேயே, ஸ்டார்லிங்கின் செயல்பாட்டை மஸ்க் மீண்டும் கொண்டுவந்தார். இச்சமயத்தில் ‘ஈரானில் ஆட்சியைக் கவிழ்க்க விரும்புவோருக்கு இணைய வசதி வழங்க வேண்டும்’ என்ற ஒரு X தள கோரிக்கைக்குப் பதிலளித்த அவர், “செயற்கைக்கோள் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன” என்று பதிவிட்டார்.

@marklevinshow The beams are on


— Elon Musk (@elonmusk)
June 14, 2025

அதாவது, போரின்போது தகவல் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரான் அரசு இணையக் கட்டுப்பாடுகளை விதித்திருந்த சூழலில், தனது செயற்கைக்கோள் இணையச் சேவை ஈரானில் கிடைப்பதாக மஸ்க் பகிரங்கமாக அறிவித்தார்.

“உலகப் பொருளாதாரம் குறித்த நிகழ்நேரத் தரவுகள் என்னிடம் அதிகம் இருக்கலாம்” – எலான் மஸ்க் 

இதுமட்டுமன்றி 2023 ஏப்ரல் மாதத்தில், “உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்கு அதிகமான நிகழ்நேரப் பொருளாதாரத் தரவுகள் என்னிடம் இருக்கிறதென நினைக்கிறேன்” என்று எலான் மஸ்க் பெருமையாகக் கூறினார். தனது மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்க், சமூக வலைதளமான X ஆகிய மூன்றிலிருந்தும் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து மஸ்க் இதை கூறினார்.

@LHSummers @federalreserve @DavidWestin @BloombergTV Between, Tesla, Starlink & Twitter, I may have more real-time global economic data in one head than anyone ever


— Elon Musk (@elonmusk)
April 30, 2023

மஸ்க் கூறிய இந்தக் கருத்துக்கள்தான், தற்போது இந்திய அரசுக்கு சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அதாவது இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயல்படும்போது அதன் மூலம் சேகரிக்கப்படும் முக்கியமான தகவல்கள், இந்தியாவின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்காணிப்புக்கு அப்பால் உள்ளவர்களின் அணுகலுக்கு அல்லது பயன்பாட்டுக்குச் செல்லாமல் பாதுகாக்கப்படுமா? அந்த தகவல்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்? இந்திய மக்களின் இணையப் பயன்பாடு மற்றும் பிற முக்கியத் தரவுகளை வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனம் அணுகவோ பயன்படுத்தவோ முடியுமா? அப்படியானால், அந்தத் தரவுகளை இந்தியச் சட்டங்களின் கீழ் எவ்வாறு பாதுகாப்பது?

கடத்தல்காரர்கள் வசம் ஸ்டார்லிங்க்?

குறிப்பாக 2024 நவம்பர் மாதம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மியான்மருடன் தொடர்புடைய ஒரு கப்பலில் இருந்து சுமார் 6,000 கிலோ மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, கடத்தல்காரர்கள் வழிகாட்டுதல் மற்றும் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஸ்டார்லிங்க் கருவியும் கைப்பற்றப்பட்டது.

எலான் மஸ்க்

அதே காலகட்டத்தில், மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கையின்போது, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினர் ஸ்டார்லிங்க் பெயர் பொறிக்கப்பட்ட செயற்கைக்கோள் டிஷ் மற்றும் ரவுட்டர் உள்ளிட்ட கருவிகளைக் கண்டெடுத்தனர். அச்சமயத்தில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “இது தவறான தகவல். இந்தியாவுக்கு மேலே ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் முடக்கப்பட்டுள்ளன” என்று X தளத்தில் தெரிவித்தார்.

இருப்பினும் அந்தமான் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்டார்லிங் கருவிகளை முதலில் வாங்கியவர்கள் யார் என்ற விவரங்களைக் கோரி இந்திய அரசு மஸ்க்கை அணுகியது. ஆனால், தரவு தனியுரிமைச் சட்டங்களைக் காரணம் காட்டி ஸ்டார்லிங்க் அந்தத் தகவல்களை வழங்க மறுத்துள்ளது. இதை ‘தி எகனாமிக் டைம்ஸ்‘ செய்தியாக வெளியிட்டு உறுதிசெய்தது. மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவுறுத்தியதாகவும் அந்த செய்தி குறிப்பிட்டது.

ஸ்டார்லிங்க்: இந்தியாவில் பாதுகாப்பு அனுமதியின் தற்போதைய நிலை என்ன?

இந்தியாவை பொறுத்தவரை, செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்கும் வசதி, இந்தியாவிலேயே தரவுகளைச் சேமித்தல், புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் தேவைப்படும்போது இணைய இணைப்பைத் துண்டிக்கும் வசதி ஆகியவை அடங்கும். மேலும், இந்தியாவின் சட்ட வரம்புகளுக்கு வெளியே அனுமதியின்றித் தகவல்கள் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்காக, செயற்கைக்கோள் கேட்வேக்கள் மற்றும் தகவல் தொடர்புகள் செல்லும் வழித்தடங்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசு கோரியுள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச் சேவைகளை வழங்குவதற்கான GMPCS உரிமத்தையும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இருப்பினும், இறுதிக்கட்ட பாதுகாப்பு நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதும், அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதும் நிலுவையில் இருப்பதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மூன்று செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அவை நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, அலைக்கற்றைக்கான விலை நிர்ணய நடைமுறையும் முடிந்த பிறகே வணிக ரீதியான சேவைகளைத் தொடங்க முடியும் என்று அவர் கூறினார். இந்த இடத்தில்தான் தற்போது ஸ்டார்லிங்க் நிற்கிறது.

Read More

Previous Post

மோடி பங்கேற்ற அரச விழாவில் அடர் கருநீல உடையில் விஜய்! அரசியல் குறியீடா என எழுந்த விவாதம் – Sri Lanka Tamil News

Next Post

ஆசிரியர்களுக்கு ரூ.65,000… வைத்தியர்களுக்கு ரூ.94,000! 2027 ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
ஆசிரியர்களுக்கு ரூ.65,000… வைத்தியர்களுக்கு ரூ.94,000! 2027 ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு – Sri Lanka Tamil News

ஆசிரியர்களுக்கு ரூ.65,000… வைத்தியர்களுக்கு ரூ.94,000! 2027 ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin