• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மோடி பங்கேற்ற அரச விழாவில் அடர் கருநீல உடையில் விஜய்! அரசியல் குறியீடா என எழுந்த விவாதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மோடி பங்கேற்ற அரச விழாவில் அடர் கருநீல உடையில் விஜய்! அரசியல் குறியீடா என எழுந்த விவாதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
தமிழகம்
/
மோடி பங்கேற்ற அரச விழாவில் அடர் கருநீல உடையில் விஜய்! அரசியல் குறியீடா என எழுந்த விவாதம்

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில் முதல்வர் விஜய் அடர் கருநீல உடையில் பங்கேற்றது மற்றும் அவரது உரை அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரச நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், அடர் கருநீல நிறச் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வந்திருந்தமை அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

பொதுவாக கோட்-சூட் உடையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் விஜய், கருப்பு நிறத்தை ஒத்த அடர் கருநீல உடையில் வந்ததைச் சுட்டிக்காட்டிய த.வெ.க. தொண்டர்கள் சிலர், தங்கள் தலைவர் உடை மூலமாகவே எதிர்ப்பைப் பதிவு செய்து அரசியல் நிலைப்பாட்டைக் காட்டியுள்ளதாகத் தெரிவித்தனர். 

தமிழக அரசியலில் கருப்பு நிறம் சுயமரியாதை மற்றும் திராவிட இயக்க அரசியலின் குறியீடாகப் பார்க்கப்படும் சூழலில் இந்நடவடிக்கை பேசுபொருளானது. 

எனினும், முதலமைச்சரின் உடையில் எந்தவித அரசியல் குறியீடும் இல்லை என த.வெ.க. நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற அரச விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தினார். மேலும், பிரதமர் மோடிக்குத் தெளிவாகப் புரியும் வகையில் தமது கோரிக்கைகளை ஆங்கிலத்தில் முன்வைத்துப் பேசினார். 

இருப்பினும், தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி முதலமைச்சரின் கோரிக்கைகள் குறித்து எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், மேடையில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் பொத்தானை அழுத்தும்போது, பிரதமர் மோடி முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகன வரிசையிலேயே முதலமைச்சர் விஜய்யின் காரும் இணைந்து சென்றது. போரூரில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்தது முதல் சென்னை ஐ.ஐ.டி. விழா வரை பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுடன் இணைந்து முதலமைச்சரின் காரும் பயணித்தது. 

தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அங்கிருந்த ராம எந்திரத்தின் மீது தாமரை மலரை வைத்து அவர் பிரார்த்தனை செய்தபோது, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், முதலமைச்சர் விஜய் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More

Previous Post

Property Rights | தாயின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா? சட்டம் சொல்வது என்ன? | இந்தியா போட்டோகேலரி

Next Post

EXPLAINER | இணைய ஆதிக்கமா, நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் பற்றி எலான் மஸ்க்கே வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்! | World News (உலக செய்திகள்)

Next Post
EXPLAINER | இணைய ஆதிக்கமா, நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் பற்றி எலான் மஸ்க்கே வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்! | World News (உலக செய்திகள்)

EXPLAINER | இணைய ஆதிக்கமா, நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் பற்றி எலான் மஸ்க்கே வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin