Last Updated:
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் காந்தி விடுத்த சந்திப்பு கோரிக்கையை தலைமை நீதிபதி சூர்யா காந்த் நிராகரித்தார். வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்ற அவர் அறிவுறுத்தினார்.
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடுத்த சந்திப்புக் கோரிக்கையை நிராகரித்ததற்கான காரணங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
‘வாக்குத் திருட்டு’ (‘Vote Chori’) குற்றச்சாட்டுகள், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கூட்டணி கட்சியினர் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்லவும் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொளியில், கட்சி, பாலினம், சாதி, சமூகம் மற்றும் மாநிலம் கடந்து இந்தியர்களாக ஒன்றிணைவோம் எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து பேரணியில் பங்கேற்க வருமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். SIR நடவடிக்கையை நிறுத்துதல், ஞானேஷ் குமாரை பதவி நீக்குதல் போன்ற கோரிக்கை அடங்கிய மனுவை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், நீதித்துறையின் நடைமுறைப்படி நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதாலும் இந்தச் சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், இதுகுறித்து ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு உரிய விளக்கத்துடன் கூடிய பதிலை அனுப்பியுள்ளதாகவும் இத்தகைய விவகாரங்களை முறையாக நீதிமன்றத்தின் வாயிலாகவே அணுகலாம் என்று அவர் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிஎன்என்-நியூஸ்18-க்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்த தலைமை நீதிபதி, “என்னை சந்திக்க அனுமதி கேட்டு அனுப்பிய அகடிதம் தனக்கு தாமதமாகத்தான் கிடைத்தது. நேற்று முன் தினம் (அக்.10) தேதியிடப்படிருந்த அந்தக்கடிதம் தான் ஊரில் இல்லாததால் நேற்றுதான் கிடைத்தது. நேற்று இரவே விளக்கம் கொடுத்துவிட்டேன்” என்றார்.
#News18Exclusive இந்தியா கூட்டணி கட்சியினரை சந்திக்க மறுத்தது ஏன்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் நியூஸ் 18 குழுமத்திற்கு பேட்டி
#Surayakanth #SupremeCourt #IndiaAlliance #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9 https://t.co/gv2UMCLb8j— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 12, 2026
உச்சநீதிமன்றத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளன. நீதிமன்றத்தின் வாயிலாக அணுகலாம்.” என்றும் அவர் பதிலளித்தார். மேலும், உச்ச நீதிமன்றம் சாதாரண மக்களுக்கான ஒரு நிறுவனம் என்பதை வலியுறுத்தும் வகையில், அது குடிமக்களுக்குத் தொடர்ந்து அணுகக்கூடியதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


