Last Updated:
EPF உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண்ணைப் (UAN) பயன்படுத்தி, எந்த ஆவணங்களையும் அப்லோடு செய்யாமல் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களுக்கான ப்ரொஃபைல்களை அப்டேட் செய்வதற்கான விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது EPF உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண்ணைப் (UAN) பயன்படுத்தி, எந்த ஆவணங்களையும் அப்லோடு செய்யாமல் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம். இது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஏனெனில், இப்போது நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை.
முன்னதாக, ப்ரொஃபைல் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் உறுப்பினர்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒப்புதல் அல்லது முதலாளியின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இது சராசரியாக 28 நாட்கள் தாமதத்திற்கு வழிவகுத்தது. இப்போது, இந்த செயல்முறை விரைவுபடுத்தப்படும். ஏனெனில், இதற்கு முதலாளியின் ஒப்புதல் கூட தேவையில்லை. UAN ஏற்கனவே ஆதாருடன் சரிபார்க்கப்பட்டிருந்தால், பெயர், பிறந்த தேதி, பாலினம், குடியுரிமை, பெற்றோரின் பெயர், திருமண ஸ்டேட்டஸ், மனைவியின் பெயர், பணியில் சேர்ந்த தேதி மற்றும் வேலையை விட்டு வெளியேறும் தேதி போன்ற தகவல்களை அப்டேட் செய்ய EPFO உறுப்பினர்கள் இனி ஆவணங்களைப் அப்லோடு செய்யத் தேவையில்லை.
உங்களின் UAN அக்டோபர் 1, 2017க்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தால், ஏதேனும் மாற்றங்களுக்கு உங்கள் முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும். இது தவிர, EPF கணக்குடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். இதனால் எந்த வகையான கோரிக்கையும் விரைவாக அங்கீகரிக்கப்படும் மற்றும் திரும்பப் பெறுவதில் தாமதம் இருக்காது. EPF கணக்கு தகவலும், ஆதார் தகவலும் பொருந்தவில்லை என்றால், அப்டேட் அல்லது திரும்பப் பெறுதல் செயல்முறை தாமதமாகலாம். இது போன்ற முறைகேடுகளை சரிசெய்ய சில வாரங்கள் ஆகலாம். ஏனெனில், இது முதலாளி மற்றும் EPFO இன் ஒப்புதலைப் பொறுத்தது.
EPFO படி, இந்த புதிய செயல்முறையின் மூலம், சுமார் 45% மாற்றம் கோரிக்கைகள் தானாகவே அங்கீகரிக்கப்படும். இது செயல்முறையை முன்பை விட வேகமாகவும், எளிதாகவும் செய்யும். இது தவிர, டேட்டா துல்லியத்தை உறுதி செய்கிறது மற்றும் டேட்டா என்ட்ரியில் ஏதேனும் தவறு ஏற்படுவதற்கான பிழைகளை குறைக்கிறது. மேலும், EPF உறுப்பினர்கள் மிகவும் வசதியான மற்றும் யூசர் பிரின்ட்லி அனுபவத்தைப் பெறுவார்கள்.
இதையும் படிக்க: இந்தியாவைவிட துபாயில் தங்கத்தின் விலை மலிவாக இருப்பது ஏன்…? முக்கிய சுங்க விதிமுறைகள் இவைதான்…!
உங்கள் EPF ப்ரொஃபைலை அப்டேட் செய்வது எப்படி?
உங்கள் EPF ப்ரொஃபைலை ஆன்லைனில் அப்டேட் செய்ய இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- முதலில் EPFOஇன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.inக்கு சென்று, யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலுக்கு செல்லவும்.
- இப்போது உங்கள் UAN, பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து லாகின் செய்யவும்.
- டாப் மெனு வில் உள்ள “மேனேஜ்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- ‘மாடிஃபை பேசிக் டீடெயில்ஸ்’ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டையின்படி, உங்களின் புதிய தகவல்களை (பெயர், பிறந்த தேதி போன்றவை) என்டர் செய்து சப்மிட் செய்யவும்.
- ‘ட்ராக் ரிக்வெஸ்ட்’ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து, உங்கள் ப்ரொஃபைல் அப்டேட் ஸ்டேட்டஸை ட்ராக் செய்யலாம்.
March 10, 2025 3:03 PM IST
EPFO விதிகளில் மாற்றம்… EPF கணக்கில் இந்த அம்சங்களை முதலாளியின் ஒப்புதலின்றி அப்டேட் செய்யலாம்…!