05
மூன்றாவது சம்பவம்.. கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல் பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி பிரித்தது. 108 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நியூசிலாந்தை மீட்டெடுக்க கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். அதன்படி, 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி உடைத்தார். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி தனது கூக்ளி பந்தில் போல்டாக்கினார். 63 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல் ஷமி பந்தில் வீழ்ந்தார். எனினும், கடைசி நேரத்தில் 40 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த பிரேஸ்வெல், நியூசிலாந்து அணி 251 ரன்களை எட்ட உதவினார்.


