Last Updated:
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தில் தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதற்காகக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் இன்ஜின்களை மாற்ற வேண்டியதில்லை என்றும் பழைய வாகனங்களை E20 பெட்ரோலில் இயக்கும்போது அதன் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமோ அசாதாரண தேய்மானங்களோ ஏற்படவில்லை என்றும் மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள அவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்திய பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகளின் விவரங்களை சுட்டிக்காட்டி உள்ளார்.
அதன்படி, E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதற்காகக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் இன்ஜின்களை மாற்ற வேண்டியதில்லை என்றும் பழைய வாகனங்களை E20 பெட்ரோலில் இயக்கும்போது அதன் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமோ அசாதாரண தேய்மானங்களோ ஏற்படவில்லை என்றும் நிதின் கட்கரி விளக்கம் தந்துள்ளார்.
பிஎஸ்-6 வாகனங்கள் E20 எரிபொருளில் இயங்கும்போதும் வழக்கமான உமிழ்வு விதிகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் வாகனங்களை இயக்குவது, ஸ்டார்ட் செய்வது, உலோகம், பிளாஸ்டிக் பாகங்களின் பயன்பாடு ஆகியவற்றில் எந்தப் பிரச்சினையும் பதிவாகவில்லை என்றும் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிவில் கூறியுள்ளார்.
அதேவேளையில், 2005 முதல் 2016-ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 ரக வாகனங்களில் E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் சில ரப்பர் பாகங்கள், கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம் என பரிசோதனை முடிவுகள் கூறுவதாக நிதின் கட்கரி விவரித்துள்ளார்.
அதே சமயம், மைலேஜ் குறைவு என்பது ஓட்டுநரின் ஓட்டும் பழக்கம், ஆயில், டயர் காற்று அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமையும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பால விபத்துகள் மற்றும் கட்டுமானக் குறைபாடுகள் காரணமாக 11 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Jul 30, 2026 12:24 PM IST
E20 பெட்ரோல்: “பழைய வாகனங்களின் இன்ஜின்களை மாற்ற வேண்டியதில்லை” – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்


