• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!! | Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs!

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!! | Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!!

இந்தியாவில் ஈ20 பெட்ரோல் பயன்படுத்துவது மூலம் வாகனங்களில் மைலேஜ் குறைவது குறித்துத் தொடர்ந்து மக்கள் மத்தியில் சலசலப்பு இருவரும் வேளையில், எரிபொருள் செலவுகளைக் குறைப்பதற்காகவும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்தைக் கொடுக்கவும் மத்திய அரசு தொடர்ந்து எத்தனால் கலப்பு கொள்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் மத்திய அரசு இன்று ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும், எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்கள், எத்தனால் உற்பத்தியாளர்களுக்கும் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளது.

E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!!

இந்திய வாகன சட்டத்தின் கீழ் ஈ100 அதாவது முழுக்க முழுக்க எத்தனால் மூலம் இயங்கும் கார்களை பயன்படுத்தும் பிளெக்ஸ் ஃபியூயல் கார்களை அறிமுகம் செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கும் வகையில் திருத்தம் செய்துள்ளது.

இதற்கான விதிகள் மாற்றத்தை மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளில் கொண்டு வந்துள்ளது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை. இதன் மூலம் மத்திய அரசு இந்த எரிபொருள் சந்தையில் வாகனங்களுக்கான எரிபொருளாக E85 உடன் சேர்த்து E-100 எரிபொருளைப் பயன்படுத்த அதிகாரப்பூர்வ அனுமதியைக் கொடுத்துள்ளது.

இந்த ஒரு அனுமதி மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்து கார் உற்பத்தியாளர்களும் flex-fuel இன்ஜின் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் இறங்க உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு மவுசு அதிகமாக இருக்கும் வேளையில் தற்போது இப்பட்டியலில் பிளெக்ஸ் ஃபியூயல் வாகனங்களும் சேர உள்ளது.

Flex Fuel இன்ஜின் இருந்தால் ஒருவர் பெட்ரோல், எத்தனால் கலந்த பெட்ரோல், எத்தனால் மட்டுமே என எத்தகைய எரிபொருள் கொண்டு இயக்க முடியும். இதனால் வாகனங்களின் மைலேஜ், இன்ஜின் பாகங்கள் என எதுவும் பாதிக்கப்படாது.

இதேபோல் E85 மற்றும் E100 எரிபொருள் விலை தற்போது சந்தையில் விற்கப்படும் பெட்ரோல் விலையைக் காட்டிலும் 60-70 சதவீதம் குறைவாக இருக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே இந்தியாவில் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வரும் வேளையில், இந்த ஒரு அறிவிப்பு அதிகப்படியான உற்பத்திக்கு முக்கிய தீர்வாக இருக்கும்.

எத்தனால் அல்லது E-100 எரிபொருள் விலை குறைவானதாக இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் இதைப் பயன்படுத்த ஆர்வம் அதிகரித்தாலும், இதை தற்போது பயன்படுத்தி வரும் கார்களில் பயன்படுத்த முடியாது, பயன்படுத்தவும் கூடாது.

பிளெக்ஸ் ஃபியூயல் இன்ஜின் கொண்ட கார்களில் மட்டுமே E85 அல்லது E100 எரிபொருளை பயன்படுத்த முடியும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் E20 கார்களிலோ அல்லது மற்ற பெட்ரோல், டீசல் கார்களிலோ பயன்படுத்த கூடாது.

E-100 எரிபொருளை தற்போது பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் முழுமையாக எத்தனால் மூலம் இயங்கும் Flex Fuel technology-ஐ அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த விதிகள் மாற்றம் ஆட்டோமொபைல் துறைக்கு முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என்பது தான்.

மத்திய அரசின் இந்த ஒரு திருத்தம் மூலம் இந்தியாவில் அடுத்த சில வருடத்தில் எரிபொருள் இறக்குமதியும், எரிபொருளுக்காக பயன்படுத்தும் டாலர் இருப்பையும் சேமிக்க முடியும்.

Share This Article

English summary

Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs!

Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs! — E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!!

Story first published: Monday, October 26, 2026, 16:38 [IST]

Other articles published on Oct 26, 2026

Read More

Previous Post

சீனத் தூதுவர் – புத்தசாசன அமைச்சர் சந்திப்பு

Next Post

பாகிஸ்தான் – ஈரான் எல்லை மீண்டும் திறப்பு… | Makkal Osai

Next Post
பாகிஸ்தான் – ஈரான் எல்லை மீண்டும் திறப்பு… | Makkal Osai

பாகிஸ்தான் - ஈரான் எல்லை மீண்டும் திறப்பு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin