Last Updated:
Drug Awareness| மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ராமநாதபுரம் அருகே இன்பான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா, ஹேமநாதன் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியானது நடைபெற்றது. இந்த சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதன் பின், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 06, 2025 1:41 PM IST

