Last Updated:
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் ஆவேசம் அடைந்திருக்கிறார்.
அரசு நிர்வாகம் சார்ந்த மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு புதிய ஊக்கத்தொகை திட்டமான “Fraud Whistleblower Incentive Program” என்ற திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்த திட்டத்தின்கீழ், அரசு பணத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து உண்மையான தகவல்களை வழங்கும் குடிமக்களுக்கு இந்திய மதிப்பில் 235 கோடி ரூபாய் வரை வெகுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அப்போது, ஏற்கனவே உள்ள திட்டத்தின் படி, 15% முதல் 30% வரை ஊக்கத்தொகை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தி இண்டிபெண்டண்ட் (The Independent) ஊடக செய்தியாளர் ஆண்ட்ரூ பெயின்பெர்க் (Andrew Feinberg) கேள்வி எழுப்பினார். மேலும், டிரம்ப் ஏராளமான கோல்ஃப் மைதானங்களை வைத்திருப்பதாக அவர் கூறியதால், கோபமடைந்த அதிபர் டிரம்ப், அந்த செய்தியாளரை பார்த்து கடிந்து கொண்டார்.
President Donald Trump lost his temper after The Independent’s White House Correspondent Andrew Feinberg questioned him on his new anti-fraud program on Tuesday (20 October). https://t.co/BJrwF52yJb
— The Independent (@Independent) October 20, 2026
கடந்த மாதம் ஈரான் போரைப் பற்றிப் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, சிஎன்என் (CNN) தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் கோபத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்ப்பின் இந்த அடுத்தடுத்த செயல்கள், சமூகவலைதளங்களில் எதிர்ப்பலைகளை பெற்றுவருகிறது.


