Last Updated:
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீனாவின் ‘யுவான்’ நாணயத்தைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலித்து வருகிறது.
ஈரானின் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டாலரை எட்டியுள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக உலக எரிபொருள் விநியோக சங்கிலி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை சற்றே குறைந்தது. இச்சூழ்நிலையில் அரபிக் கடலில் சென்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஹார்முஸ் நீரிணை
இதன் காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பேரலுக்கு 96.50 டாலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 90 டாலராகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே, கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீனாவின் ‘யுவான்’ நாணயத்தைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலித்து வருகிறது.
மீண்டும் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு… மீண்டும் உச்சம்தொட்ட கச்சா எண்ணெய் விலை!

